நாட்டின் ஸ்திரத்தன்மை அவசியம் என மத்திய வங்கியின் ஆளுனர் வலியுறுத்தல்

.
மிக விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மை நாட்டில் ஏற்படவில்லை என்றால் நாட்டு மக்கள் மேலும் நெருக்கடி நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனைக் குறி;பபிட்டார். தற்போதைய நிலையில் இரண்டு வாரங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான பணமே செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பின்னரான நிலமை தொடர்பிலான திட்டங்களை வகுக்க நிலையான அரசாங்கம் ஒன்று அவசியமாகின்றது. மக்களின் நெருக்கடிகளைக் குறைப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்று அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
