நாட்டில்இ எதிர்வரும் 25 ஆண்டு காலத்திற்கு புதிய சீர்திருத்த வேலைத்திட்டம்

எதிர்வரும் 25 ஆண்டு காலத்திற்கான புதிய சீர்திருத்த திட்டத்துடன் தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நமோ..நமோ.. தாயே நூற்றாண்டுக்கு ஒருபடி என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.; 2048ஆம் ஆண்டு 100ஆவது சுதந்திர தினம் வரை இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மாறாத வகையில் அமுல்படுத்தவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குனவர்த்தன தலைமையில் ஆரம்பமாகும்.
சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேச பிதா டி.எஸ்.சேனநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துவதுடன், ஜனாதிபதி செயலக வளாகத்தில் உள்ள தேசிய மாவீரர்களின் உருவச் சிலைகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் நிகழ்வுகள் ஆரம்பமாகும். 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்ட நாடளாவிய ரீதியில் கலாசார மற்றும் சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
