நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட வங்கி முறைகளுக்கு அப்பால் பணம் அனுப்பும் முறை தற்போது குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவிப்பு

நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட வங்கி முறைகளுக்கு அப்பால் பணம் அனுப்பும் முறை தற்போது குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். உண்டியல் போன்ற முறைகள் மூலம் பணம் அனுப்பும் நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது. எவரிடமாவது வெளிநாட்டுப் பணம் இருப்பின் அவற்றை வங்கிகளில் வைப்புச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது தேவையில்லாமல் வெளிநாட்டுப் பணத்தை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
