நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மட்டாது என விவசாய அமைச்சுத் தெரிவிப்பு.

தேவையற்ற வகையில் உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்து சேகரித்து வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மக்களைக் கேட்டுக் கொண்டார். தேவையான நெல் நாட்டில் உண்டு. இம்முறை போகத்தின் ஆரம்பத்தில் நெல் உற்பத்தி 2 இலட்சத்து 70 ஆயிரம் ஹெக்டயரில் மேற்கொள்ளப்பட்டது. உற்பத்தி தொடர்பில் மக்களை அரசாங்கம் வலியுறுத்தியத்திற்கு அமைவாக இந்த உற்பத்திக்கான காணி தற்போது 4 இலட்சத்து 70 ஹெக்டயராக அதிகரித்துள்ளது. உரத்தை இலவசமாக வழங்கிய காலப்பகுதியிலும் பார்க்க இது அதிகரித்த உற்பத்தியாகும். ஆகவே அரிசி தட்டுப்பாடோ, உணவுத் தட்டுப்பாடோ நாட்டில் ஏற்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
