நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட மாட்டாதென அரிசி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட மாட்டாதென நிவிரட்ன அரிசி ஆலையின் உரிமையாளர் எல்.ஜே மித்ரபால தெரிவித்துள்ளார். நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசி வகைகள் சந்தைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், அரிசியை களஞ்சியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை எவருக்கும் இல்லை என்று அவர் கூறினார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரைவில் நெல் அறுவடை இடம்பெறவிருப்பதாகவும், தேவைக்கேற்ற அரிசியை சந்தைக்கு வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
