நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் நாளை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுலாக இருக்கின்றது. 60 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
