நாட்டில் உள்ள மருந்துக் கையிருப்புப் பற்றி நாளாந்தம் கலந்துரையாட நடவடிக்கை
நாட்டில் கையிருப்பில் உள்ள மருந்து வகைகள் தொடர்பாக ஆராயும் விசேட குழு நாளாந்தம் கூடவிருக்கின்றது. சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம், வைத்திய விநியோகப் பிரிவு, தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை, சுகாதார அமைச்சு என்பனவற்றின் அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். மருத்துவ விநியோகப் பிரிவு உட்பட உரிய நிறுவனங்களில் காணப்படும் மருந்துக் கையிருப்பப் பற்றிநாளாந்த அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களுக்குள் சுகாதார அமைச்சர் தலைமையில் இந்தக் குழு நாளாந்தம் கூடவிருக்கின்றது. மருந்துக் கொள்வனவிற்காக இந்தியாவின் கடனுதவி, ஆசிய முதலீட்டு வங்கி உட்பட பல்வேறு நிறுவனங்களினதும் ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளவும் சுகாதார அமைச்சுத் திட்டமிட்டுள்ளது.