நாட்டின் பொருளாதாரம் வலுவடைய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, வர்த்தகப் பொருட்களின் விலை வீழ்ச்சி கண்டதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டின் உள்ளக செயற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளார். இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அதிகளவிலானோர் தம்மிடம் மறைத்து வைத்திருந்த டொலர்களை மாற்றி வருவதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். நாடு தெளிவான பாதையில் பயணிப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.