எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தொகை உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது, மூன்று லட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமான மெற்றிக் தொன் நிலக்கரி களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 22 நிலக்கரி கப்பல்களிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. இரண்டு கப்பல்களிருந்து நிலக்கரியை தரையிறங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அத்துடன், மேலும் ஐந்து கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தேசிய வானொலிக்கு தெரிவித்தார்.