நாட்டில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் ஜனாதிபதியிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு

.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சகல தரப்பினருடனும் இணைந்து செயற்படும் தலைவராக ஜனாதிபதி திகழ்வதாகவும் அவர் குறி;ப்பிட்டார். சர்வதேச நாடுகளில் அவருக்குள்ள அங்கீகாரத்தினால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு வெளிநாடுகள் தயாராகியுள்ளன. இவ்வாறான பின்னணியில் போராட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நாட்டை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சியினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பாலித்த ரங்கே பண்டார கூறினார்.
