Home » நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்க முனைப்புக் காட்டும் ஸ்ரீலங்கா பேரினவாதம் – நிஷாந்தன் 

நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்க முனைப்புக் காட்டும் ஸ்ரீலங்கா பேரினவாதம் – நிஷாந்தன் 

Source

நாட்டில் இல்லாது ஒழித்துவிட்டதாக கூறும் கோட்டா அரசு அதே பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை தான் ஆட்சியை பிடிக்கவும் ஆட்சியை, தக்கவைக்கவும் மீள் உருவாக்கத்திற்கு கோட்டா அரசு தந்திரமாக பல வழிகளிலும் முனைப்புக் காட்டி வருகின்றது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் தொடங்கி தமிழ்த் தேசியத்திற்கான நிகழ்வுகள் வரும் போது எல்லாம் அங்கு குண்டு வெடிக்கும், இங்கு குண்டு வெடிக்கும் என கூறி மக்களை அச்சுறுத்தி தனது அரச புலனாய்வு கட்டமைப்புகளை முடுக்கி விட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் யூலை 5, 6 ம் திகதிகளில் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெறலாம் என அரச காவல்துறையும், ராணுவமும், கோட்டா அரசும் ஒரு சதி வலையை பின்னத் தொடங்கியுள்ளன இது தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பிய பொழுது அரசு ஏதேதோ காரணத்தை கூறி இவ் விவகாரத்தை மழுப்பியது.
இதன் நீட்சி, சொல்லும் செய்தி என்னெவென்றால் கவிழ்ந்து கொண்டிருக்கும் அரசுக்கு எதிராக போராடும் பொது அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதே யதார்த்தமாகும்.

நாட்டின் ஜனநாயக இயந்திரத்தை முடக்கி நாட்டினை ராணுவ மயப்படுத்தும் ஒரு சூழ்ச்சியே இது போன்ற செயற்பாடுகளின் அரச பின்னணியாகும்.

இதன் தொடர்ச்சியாக அரச புலனாய்வாளர்கள் வடகிழக்கில் இயங்கும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை பின்னால் தொடர்வதும் அவர்களுக்கு தொலைபேசியுடாக அச்சுறுத்தும் பாணியில் கதைப்பதும் கடந்த சில நாட்களாக தொடர்கின்றது.

இவ் விடையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அலட்சியமாக வெறுமனே இருந்துவிடாமல் நீதிக்கான குரலை ஓங்கி எழுப்பி இவ் அரசின் கடும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

AR

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image