நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு செலவணியின் அளவில் அதிகரிப்பு

வெளிநாட்டு செலவணியை அதிகரிக்கும் இலக்குடன் முதலீட்டாளர்களுக்கு ஐந்து வருட வீசா வசதியை செய்து கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை முதலீட்டுச் சபை இதற்காக முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்த விசேட திட்டத்தின் கீழ், முதல் ஐந்துவருட வீசா வசதியை நாட்டின் முன்னணி வெளிநாட்டு முதலீட்டு நிறுவனமான வரையறுக்கப்பட்ட பேலி இன்வெஸ்மன்ட் லங்கா தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சௌவ் இன் மன் பெற்றுள்ளார்.
ராஜகிரியவில் ஆயிரத்து 200 வீடுகளைக் கொண்ட மிகப்பெரிய சொகுசு மாடி வீட்டு தொகுதித் திட்டத்தின் உரிமை சீன நிறுவனமான பேலி இன்வெஸ்ட்மென்ட் லங்கா தனியார் நிறுவனத்திற்கு காணப்படுகின்றது. இது இரண்டாயிரத்து 200 கோடி ரூபா முதலீட்டு திட்டமாகும். பேலி இன்வெஸ்ட்மென்ட் தனியார் நிறுவனம் ஆசிய பிராந்தியத்தில் வெற்றிகரமான வீடமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ள நிறுவனமாகும்.
