நாட்டுக்கு வலுவான பொருளாதார முறைமையே அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

இலங்கைக்கு பொருளாதார மறுசீரமைப்பு அன்றி, 2050ஆம் ஆண்டு காலப்பகுதிக்குத் தேவையான வலுவான பொருளாதார முறைமையே அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலம் கடந்த பொருளாதாரத் திட்டங்களின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. கூடுதலான அந்நியச் செலாவணியின் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று அவர் கூறினார்.
