விளையாட்டுத் துறையின் வெற்றிக்காக சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதுடன், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் தினேஷ் குனவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டச் செயலாளர் வெற்றிக்கிண்ண விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வு மஹரகமயில் உள்ள இளைஞர் சேவைகளன் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே பிரதமர் இதனை கூறினார்.