Home » நாட்டை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

நாட்டை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

Source
Share Button

இம்முறை வரவு செலவுத் திட்டம் நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார். இது ஒரு ஜனரஞ்சக வரவு செலவுத் திட்டம் அல்ல. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் கருப்பொருள் சமூக பாதுகாப்பு மற்றும் நிலையான பொருளாதாரம் என்பதாகும். தற்போது பணவீக்கம் 3 சதவீதமாக குறைவடைந்துள்ளது. எமது நிலையத்தில் இன்று இடம்பெற்ற தஸதெசின் ஹத்த நிகழ்;ச்சியில் கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து அதனை மீட்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியாக இருந்து அரசாங்கத்தை ஆதரித்தாலும் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை. மக்களின் பிரச்சினைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கலந்துரையாடி வருவதாகவும் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

எமது நிலையத்தில் இன்று இடம்பெற்ற தசதெசின் ஹத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image