நாட்டை மேலும் சிறந்த மட்டத்திற்கு அரசாங்கத்தை எடுத்துச் செல்வது இலக்காகும் என்று பிரதமர் தெரிவிப்பு

நாட்டை மேலும் சீரான நிலைக்கு முன்னெடுத்துச் செல்வதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நடைமுறைச் சாத்தியமான விதத்தில் நாடு பற்றி கவனம் செலுத்துவது அவசியமாகும்.
புதிய தலைமுறையினரின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் வீண்விரயத்தை ஒழிப்பது அவசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் அதிதியாக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
