நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும், ஒரு தூதுவருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன

நான்கு நிறுவனங்களின் தலைவர்கள், ஒரு வெளிநாட்டுத் தூதுவர் ஆகியோரின் நியமனத்திற்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற குழு அங்கீகாரம் அளித்துள்ளது. குவைத்திற்கான இலங்கையின் புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியம் நியமிக்கப்படவுள்ளார். சிவில் விமானப் போக்குவரத்துச் சபையின் புதிய தலைவராக உபுல் தர்மதாஸவை நியமிக்கவும் அனுமதி கிடைத்துள்ளது. தேசிய கடதாசி தொழிற்சாலையின் புதிய தலைவராக விமல் ரூபசிங்க நியமிக்கப்படவுள்ளார். பிரதேச அபிவிருத்தி வங்கியின் புதிய தலைவராக எம்.டி.மஹிந்த சாலியவை நியமிக்கவும் அனுமதி கிடைத்துள்ளது. இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டபிள்யு.எஸ்.பாலசூரிய நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
