நான்கு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு – களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 77 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர், 14 அரை லட்சம் ரூபா மற்றும் வான் ஒன்றுடன் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஏனைய 60 பேர் திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, மன்னாரிலிருந்து வத்தளை ஹெந்தல பிரதேசத்திற்கு எடுத்துவரப்பட்ட நான்கு கிலோ 329 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவற்றின் பெறுமதி சுமார் ஆறு கோடி ரூபாவாகும். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பகுதியைச் சேர்ந்தவராவார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
