Home » நாளைய கர்த்தால் கிழக்கிலும் பல தரப்புக்கள்ஹர்த்தாலுக்கு முழு ஆதரவு

நாளைய கர்த்தால் கிழக்கிலும் பல தரப்புக்கள்ஹர்த்தாலுக்கு முழு ஆதரவு

Source
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகங்களும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனமும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முற்றாக எதிர்க்கின்றோம். கடந்த 30 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் திணிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக முஸ்லிம் சகோதரர்கள் மீதும் திணிக்கப்பட்டிருந்தது. தற்போது அரகலய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக அது திணிக்கப்பட்டு இருந்தது. சிங்கள மக்களும் இந்தச் சட்டத்தை எதிர்த்துள்ளனர். ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போராட்டங்களை ஒடுக்க இப்படியான கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். எனவே நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்’ என்று திருகோணமலை சிவில் சமூகங்களின் கூட்டமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் திருநாவுக்கரசு கோபகன் தெரிவித்தார். ‘சிறுபான்மை இனங்களை ஒடுக்க முற்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்’ என்று அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார். ‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்ச்சியாக தமிழர்களின் இருப்பை நசுக்குகின்ற ஒரு கருவியாக கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதனை எதிர்த்து வடக்கு=கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எமது பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றோம்’ என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் சபாரத்தினம் சிவயோகநாதன் தெரிவித்தார். நாளைய முழு முடக்கத்துக்கு இந்து அமைப்புக்களும் ஆதரவு தமிழர் தாயகத்தில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள முழு முடக்கப் போராட்டத்துக்கு ஆதீனங்களும், இந்து அமைப்புக்களும் ஆதரவைத் தெரிவித்துள்ளன. ‘தமிழ் தேசிய சக்திகளின் ஒருங்கிணைப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வட கிழக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்துக்கு ஏமது பூரண ஆதரவையும் ஆசியையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம். அண்மைக்காலமாக வெவ்வேறு வடிவங்களில் வீரியம் பெற்றுள்ள தமிழின அழிப்புக்களுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழினமும் தமது எதிர்ப்பைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். எமக்கான பயனுறுதி வாய்ந்த தீர்வுகள் கிடைக்கும் வரை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின்  சிவில் அமைப்புக்களும்  தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்த தொடர் போராட்டத்தின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்படும் இந்தக் கதவடைப்பை அனைவரும் இணைந்து வலுச்சேர்ப்போம்.  இன்று வலியுறுத்தப்படும் எம் அடிப்படை உரிமைகள் , மரபுரிமை சார்ந்த பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டங்களுக்கு தமிழ்ச் சமூகம் தயாராக உள்ளது என்பதை அரசும் சர்வதேசமும் புரியும் வகையில் எமது கதவடைப்பு ஒருமித்த ரீதியில் வடக்கு= கிழக்கு தமிழர் தாயகம் தழுவியதாக அமைய அனைத்து தரப்பினரையும்  வடக்கு =கிழக்கை சார்ந்த சைவ ஆதீனங்களாகிய நாம் கேட்டு நிற்கின்றோம். அதே நேரம் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தொடர்ந்து அரசு செவி சாய்க்காத நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் ஏகோபித்த குரலைப் பிரதிபலிக்கும் வகையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாடாளுமன்றத்தை புறக்கணிக்குமாறும் கேட்டு நிற்கின்றோம்’ என திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ்ப்பாணம் மெய்கண்டார் ஆதீனத்தின் தவத்திரு உமாபதிசிவம் அடிகளார் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். ‘அரசின் அநீதியான செயற்பாடுகளை எதிர்த்து சாத்வீக ரீதியில் அரசுக்கும், உலகுக்கும் எமது உணர்வை துல்லியமாக வெளிப்படுத்துவதற்கு கதவடைப்பு மிகப் பெரிய ஆயுதமாகக் காணப்படுகிறது. இதனை பௌத்த வெறிபிடித்த இந்த அரசுக்கு எதிராக ஏந்தும் அரிய சந்தர்பத்தை தமிழ்த் தேசியக் கட்சிகள் நாளை எமக்கு ஏற்படுத்தியுள்ளன. இதனை முறையாகப் பயன்படுத்தி எமது எதிர்ப்பை வெளிக்கொணரவேண்டும். இந்த அரசு கொண்டுவரும் பயங்கரவாதச்சட்டத்தை சிங்கள மக்களை காட்டிலும் தமிழருக்கெதிராகப் பிரயோகிக்கும் சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தென்படுகிறன. ஆதலால் நாம் எமது எதிர்ப்பை நன்கு வெளிப்படுத்த வேண்டுமென்று அனைவரையும் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்’ என இந்து சமயப் பேரவையின் தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன் தெரிவித்துள்ளார். நாளை  பொதுமுடக்கம் தமிழ் = முஸ்லிம் தலைமைகள் ஓரணியாக முழுமையான ஆதரவு தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர். அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை எடுத்துரைப்பதற்கு மக்கள் தமது இயல்புவாழ்வை நிறுத்தி ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடவேண்டும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள =பௌத்தமயமாக்கலை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகின்றது. ‘வடக்கு = கிழக்கில் அரசின் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் அரசு கொண்டு வரத் தீர்மானித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிராகவும் நாளை செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஹர்த்தால் ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். போராட்டக்காரர்களின் – மக்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் கொடூர சட்டவரைவையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்கள் பிரதிநிதிகளான நாம் எப்போதும் மக்களின் பக்கம் நின்றே செயற்படுவோம்’ என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் , ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். ‘பௌத்த = சிங்கள இராணுவமயமாக்கும் அரசின் செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த ஹர்த்தால் ஆரம்பமே. நாம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். ஜனநாயகத்தை ஒடுக்க புதிய வடிவில் அரசாங்கம் கையாளும் ஆயுதமே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். அதை அனுமதிக்க முடியாது’ என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். நாம் எங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டவேண்டும். அதைச் செய்யத் தவறினால் அரசாங்கத்தின் நடவடிக்கையை மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்குச் சொல்லப்படும். அதை அவர்களும் ஏற்கும் அபாயம் இருக்கின்றது. எனவே நாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் சிங்கள = பௌத்த மயமாக்கல் ஆகியனவற்றை ஒன்றுபட்டு எதிர்க்கவேண்டும்’ என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவுகளை முழுமையான உணர்ந்தவர்கள் நாங்கள். எனவே அதைவிட மோசமான சட்டத்தை அனுமதிக்க முடியாது. எமது பிரதேசத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலும் தொன்மங்களை அழிக்கும் வகையிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதியால் முடியும். இதற்கு கால அவகாசம் தேவையில்லை. அதனை உடனடியாகச் செய்யவேண்டும்’ என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். எங்களது விடுதலைப் போராட்டத்தை ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளும் பயங்கரவாதமாகத்தான் சித்தரித்திருக்கின்றன. எனவே பயங்கரவாதம் என்ற சொல்லுடன் வருகின்ற சகல சட்டங்களையும் நாங்கள் எதிர்க்கவேண்டும். இல்லையெனில் எமது விடுதலைப்போராட்டத்தை முடக்கிவிடுவார்கள்’ என்று புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். ‘இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் நாமில்லை என்பதை நிறுவுவதற்கு சிங்கள = பௌத்த பேரினவாதம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அதை நாம் முறியடிக்கவேண்டும். ஹர்த்தாலுக்கு அனைத்து மக்களும் ஒன்றுபட்டு ஆதரவு வழங்கவேண்டும்’ என்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேன் தெரிவித்தார். ‘பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வலிகளை அனுபவித்தவன் நான். அதைவிட மோசமான சட்டம் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எம்மை ஒடுக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நாம் ஆதரிக்க முடியாது’ என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார். ‘தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் – முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து வடக்கு = கிழக்கு மாகாணங்களை ஸ்தம்பிக்கச் செய்வோம். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை சிங்களவர்களும் எதிர்க்கின்றார்கள். நாமும் அதை எதிர்க்கவேண்டும். மிகமோசமான அந்தச் சட்டம் கைவிடப்படவேண்டும் ‘ என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா தெரிவித்தார். ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும், வடக்கு = கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற சிங்கள = பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் வடக்கு =கிழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். வடக்கு – கிழக்கில் சிங்கள – பௌத்த மயமாக்கல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தமிழர் மீது 40 வருடங்களாகத் தலைவிரித்தாடிய பயங்கரவாதச் தடைச் சட்டம்  புதுப்பிக்கப்படுவதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார். போராட்டங்களால்தான் நாடு வீழ்ச்சியடைந்ததாம்! மஹிந்த ராஜபக்சவுக்கு கவலை பிரயோசனமற்ற இப்படியான போராட்டங்கள்தான் நாட்டை கடந்த காலங்களில் படுவீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். ‘மக்கள் போராட்டம் நடத்த முழு உரிமையுண்டு. அதற்காக பிரதேசங்களை முடக்கி வாழ்வாதாரத்தை முடக்கி போராட எவருக்கும் அனுமதி வழங்க முடியாது. ஒரு சில மக்கள் தரப்பினரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பிரயோசனமற்ற இப்படியான போராட்டங்கள்தான் நாட்டை கடந்த காலங்களில் படுவீழ்ச்சிக்கு இட்டுச் சென்றன. நாட்டில் சகல உரிமைகளும் இருக்கின்றது என்பதற்காக எவரும் சட்டத்தை மீறி செயற்பட முடியாது. இப்படியான போராட்டங்களால் கடந்த காலங்களில் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தமையையும் எளிதில் மறந்துவிடமுடியாது’ =என்றார். நாளைய ஹர்த்தாலுக்கு ஜே.வி.பி.யும் ஆதரவு கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் மூர்க்கத்தனமான சட்டமே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.  இதற்கு எதிராக யார் போராடினாலும் எமது ஆதரவு இருக்கும். வடக்கு= கிழக்கு தழுவிய ரீதியில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவுகளை வழங்குகின்றது =இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:– மக்கள் விரோத ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றனர். இதற்கு எதிராக மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளைக் கோரி நிற்கின்றார்கள். மக்களை முடக்குகின்ற பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் முடியாவிட்டால் நாடாளுமன்றத்தின் வெளியில் நின்றாவது  தோற்கடிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி செயற்படும். தனித்தனியாக யார் இதற்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினாலும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் ஆதரவை வழங்குவோம் = என்றார். ஹர்த்தாலுக்கு ஆதரவளியுங்கள் புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை நாளை முன்னெடுக்கப்படும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தாயக உறவுகள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் மற்றும் பிரித்தானிய சைவத் திருக்கோயில்களின் ஒன்றியம் என்பன அழைப்பு விடுத்துள்ளன. ‘நாட்டில் வாழும் எமது உறவுகளை எந்த பாகுபாடுமின்றி ஹர்த்தாலுக்கு ஆதரவளித்து அதனை வெற்றிபெறச் செய்து சிங்கள =பௌத்த அரசுக்கு காண்பிக்குமாறு உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளன. கல்வி நடவடிக்கைகள் நாளையதினம் முடங்கும் ஆசிரியர் சங்கமும் ஆதரவு நாளை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் யாழ். மாவட்டச் செயலர் ஜெயராஜ் குலேந்திர வொல்வின் தெரிவித்ததாவது, கடந்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் விளைவுகளை நாம் முழுமையாக அனுபவித்துள்ளோம். இந்த நிலையில் புதிதாகக் கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் மக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள். வடக்கு =கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் சார்பாக ஆதரவை வழங்குவதோடு ஒவ்வொரு ஆசிரியரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கி வலுச்சேர்க்குமாறு கோருகின்றோம் = என்றார். நீதிமன்றில் சட்டத்தரணிகள் முன்னிலையாக மாட்டார்கள். தமிழர் தாயகத்தில் நாளை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு வவுனியா வலய சட்டத்தரணிகள் சங்கம் முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. நீதிமன்றில் நாளைய தினம் சட்டத்தரணிகள் முன்னிலையாகமாட்டார்கள் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சட்டத்தரணிகளை உள்ளடக்கியதே வவுனியா வலய சட்டத்தரணிகள் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தைகள் மூடப்படும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியத்தின் தலைவர் சின்னத்துரை முகுந்தன் தெரிவித்துள்ளார். ‘புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் பூர்வீக இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற இந்தக் கடையடைப்புப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம். வடக்கு மாகாண சந்தை வியாபாரிகள் அன்றாடம் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டே வாழ்வாரத்தை கொண்டு சென்று கொண்டிருக்கக் கூடிய இக்கட்டான நேரத்திலும் கூட தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கான இவ்வாறான போராட்டங்களுக்கு எமது வாழ்வாதாரத்தையும் தாண்டி ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். ஆகவேதான் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளிலும் உள்ள வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளோம்’= என்றார். சலூன்கள் நாளை பூட்டு வடக்கு மாகாண அழகக சங்கங்களும் ஆதரவு வடக்கு = கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சமாசம் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. சமாசத் தலைவர் உதயசங்கர் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில், வடக்கு கிழக்கு அழகக சங்கங்கள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியுள்ளது. ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்துக்கும் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் நாளைய போராட்டத்துக்கும் நாம் ஆதரவு வழங்குகின்றோம்’= என்றுள்ளது. போக்குவரத்து இடம்பெறாது நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக போக்குவரத்துச் சங்கங்களும் அறிவித்துள்ளன. ‘ஹர்த்தால் அன்று எமது சங்கப் பணியாளர்களால் போக்குவரத்துச் சேவை எதுவும் முன்னெடுக்கப்படாது. நாம் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம்’ என்று யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் சங்கத் தலைவர் கெங்காதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத் தலைவர் ந.சற்குணராஜா ஆகியோர் தெரிவித்தனர். ஹர்த்தாலால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான  தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ளவேண்டும் =இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:– மக்களை அடக்கி ஒடுக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு கொண்டு வரப்படுகின்றதென தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் வதந்திகளை நாம் அடியோடு மறுக்கின்றோம். பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட பின்னர்தான் அது தொடர்பான கருத்துக்களை வெளியிடமுடியும். சட்டவரைவில் திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும். அதைவிடுத்து அந்த சட்டவரைவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதும் ஹர்த்தால் நடத்துவது நடத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஹர்த்தால் போராட்டம் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற  போராட்டமாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும். ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இதைக் கவனத்திற்கொள்ளவேண்டும் =என்றார். இதேவேளை ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு மற்றொரு பிரதான காரணமாக வடக்கு = கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த = சிங்கள மயமாக்கலை தமிழ்க் கட்சிகள் குறிப்பிடுகின்றனவே என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டபோது, தமிழ்க் கட்சிகளின் இந்தக் கோரிக்கை தொடர்பில் உரிய கவனம் செலுத்துவோம். வடக்கு= கிழக்கில் சிங்கள=பௌத்த ஆட்சியமைப்பு என்று சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image