Home » நாளை இடம்பெறவுள்ள வாக்கெடுப்பை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு சகல கட்சிகளினதும் ஒத்தழைப்பை சபாநாயகர் கோரியுள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள வாக்கெடுப்பை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு சகல கட்சிகளினதும் ஒத்தழைப்பை சபாநாயகர் கோரியுள்ளார்.

Source
Share Button

சட்டத்திட்டங்களுக்கு அமைவாக பாராளுமன்றத்தினால் நாளைய தினம் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கொடுப்பு இடம்பெறவுள்ளது. ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து இதனை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குமென தாம் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சட்ட வரைமுறைகளுக்கமய இதுவரை செயற்பாட்டை முன்னெடுக்க ஒத்தழைப்பு வழங்கிய அணைவருக்கும் சபாநாயககர் நன்றி தெரிவித்துள்ளளார்.

நாளைய தினம் இடம்பெறவுள்ள ரகசிய வாக்கெடுப்பில் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க செயற்படவுள்ளார்.

வாக்கெடுப்பு இடமம்பெறுவதற்கு முன்னர் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காகவுள்ள விசேட சட்ட திட்டங்கள் குறித்த வழிகாட்டல்கள் குறித்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவு படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதனை அடுத்து எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image