அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் அவசர தீ அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயினால் ஏற்படும் ஆபத்தான சூழ்நிலையே இதற்குக் காரணமாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 49 அடி உயரத்திற்கு தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் வசிக்கும் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. நியூசவுத்வேல்ஸ் மாகாணம் முழுவதும் 33 காட்டுத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் பத்து காட்டுத் தீ இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வறட்சியான வானிலை அதிகரிப்பதனால், புதிய காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.