நியூயோர்க்கில் துப்பாக்கி உரிமை சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் துப்பாக்கி உரிமை சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி கலாசாரத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ-பைடன் அறிவித்திருந்தார். இந்நிலையில், துப்பாக்கி பயன்பாட்டில் சீர்திருத்தங்கள் மாகாண செனட் சபையினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு மாகாண கவர்னர் கேந்தி ஹோச்சுல் இணக்கம் தெரிவித்துள்ளார். அதன்படி, நியூயோர்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது 18இலிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், கவச உடைகளை வாங்குவதற்கும் இந்த சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
