நிரந்தர நியமனம் பெறாத பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

நியமனங்களை வழங்கும் போது பல்வேறு சிக்கல்கள் காரணமாக நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பல்வேறு குறைபாடுகள் காரணமாக 461 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்து பேசும் போது, பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இதுகுறித்து ஏற்கனவே அமைச்சின் செயலாளர் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பித்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.
