நிர்ணய விலைக்கு அதிகமாக முட்டையை விற்பனை செய்வோரை கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு இன்று முதல் ஆரம்பம்

.
நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டை விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக முட்டையை களஞ்சியப்படுத்துவோரை கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரமப்மாகிறது. முட்டைக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள முட்டையை அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
