நிலக்கரியை ஏற்றிய 7 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளன

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை ஏற்றிய 7 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதில் 3 கப்பல்கள் ஜனவரி மாதம் ஐந்தாம், ஒன்பதாம், 13ஆம் திகதிகளில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவிருப்பதாகவும் அவர் கூறினார். சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை ஒப்பந்தம் இந்தோனேசிய நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்வதற்காகவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அமைச்சர் கஞ்சன விஜயசேகர நிராகரித்துள்ளார். மின்சாரத்தின் உற்பத்திச் செலவை ஈடுசெய்வதற்காகவே மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பாரத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
