நிலவும் கடதாசிக்கான தட்டுப்பாடு காரணமாக தபால் சேவைக்கு கடும் அச்சுறுத்தல்

நிலவும் கடதாசிக்கான தட்டுப்பாடு காரணமாக தபால் சேவைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார். கிடைக்கும் கடிதங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. தபால் சேவைக்கான முத்திரைகள் மற்றும் கடித உறைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளக கடித சேவைக்காக கடதாசி பயன்படுத்துவதற்கு பதிலாக மின் அஞ்சலை பயன்படுத்துவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தபால் சேவையை வாரத்திற்கு 3 நாட்களாக மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் மாத்திரம் அந்தச் சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
