நீண்ட தூர விமான பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் முகக்கவசம் அணியுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை

நீண்ட விமான பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் முகக்கவசம் அணிவதற்கான பரிந்துரைகளை நாடுகள் முன்வைக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒமிக்ரோனின் புதிய திரிபு வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் தற்போதைய சூழ்நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலும் புதிய வைரஸ் பரவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் இந்த வருடத்தின் முதல் வாரத்தில் பதிவான கொவிட் தொற்றாளர்களில், 28 வீதமானோர் புதிய திரிபு வைரஸினாலேயே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
