உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில்; நேற்று நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க உட்பட 26 பேருக்கு நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்த வேண்டாம் என கோட்டை நீதவான் நீமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே இந்த பேரணி இடம்பெற்றது. பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுததும்; வகையில் பேரணி இடம்பெற்றமையினால் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மறறும்; கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர்.