நீர்ப் பாவனையாளர்கள் 7,500 மில்லியன் ரூபா கட்டமாகச் செலுத்த வேண்டியுள்ளது

.
நீர்க் கட்டணத்தைச் செலுத்தாத நுகர்வோரின் நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆரம்பித்துள்ளது. இதுவரையில் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் கட்டணத்தைச் செலுத்தாதோரின் எண்ணிக்கை 50 ஆயிரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை 532 மில்லியன்ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த நீர் பாவனையாளர்கள் செலுத்த வேண்டிய தொகை 7,500 மில்லியன் ரூபாவாகும். இதில் 69 வீதமானோர் வீட்டுப் பாவனைக்காக நீரைப் பயன்படுத்தியவர்களாவர். நீர்ப் பாவனையாளர்களில் 75 வீதமானோர் 25ற்கும் குறைவான அலகு நீரைப் பயன்படுத்தியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
