Home » நுரைச்சோலை மின் நிலையைத்தின் முதலாவது உற்பத்தி இயந்திரத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது

நுரைச்சோலை மின் நிலையைத்தின் முதலாவது உற்பத்தி இயந்திரத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது

Source
Share Button

QR  குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அதற்கேற்ப செயற்பட கடமைப்பட்டுள்ளதாகவும் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கிடைத்துள்ள எரிபொருளின் அளவு பயனாளிகளுக்கு வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார். இந்த நிலையில், மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரியளவில் சுப்பர் டீசல் மற்றும் டீசல் தரையிறக்கப்படுவதாக பல்வேறு ஊடகங்களிலும் தற்போது வெளியாகும் செய்திகள் பொய்யானவை எனவும், எரிபொருள்களை ஏற்றிய கப்பல்கள் இன்னமும் இலங்கைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அந்த எரிபொருள்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், எரிபொருள் பிரச்சினை ஏற்படாதவாறு செயற்பட முடியும். நுகர்வோர் தமக்குக் கிடைக்கும் எரிபொருளின் அளவை முறையான முகாமைத்துவத்துடன் வாகனங்களுக்கு பயன்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சேதமடைந்த நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது உற்பத்தி இயந்திரம் சீர் செய்யப்பட்டு, தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 300 மெகாவோட் அளவு மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைத்துக் கொள்ள முடியும் என நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image