Home » நெடுங்கேணி வெடுக்குநாரி சிவனை காணவில்லை?

நெடுங்கேணி வெடுக்குநாரி சிவனை காணவில்லை?

Source
வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடிக்குநாரிமலை சிவன் ஆலயத்தின் அத்தனை விக்கிரகங்களையும் அகற்றப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதிசிவன் ஆலயத்தில. சிவன், அம்மன், பிள்ளையார், பாலமுருகன் மற்றும. வயிரவர. விக்கிரகங்கள் இருந்து வழிபட்ட சமயம் 2019ஆம் ஆண்டில் தொல்லியல்த் திணைக்களத்தின் தொல்லை காரணமாக எவருமே அப்பகுதிக்கு செல்ல முடியாது தடுக்கப்பட்டனர். இருந்தபோதும் இது தொடரபில் வவுனியா நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வரும. நிலையில் ஆலயத்தின் விக்கிரகங்கள் அனைத்தும அரச திணைக்களம் ஒன்றால் திருட்டுத் தனமாக எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக கிடைத்த தகவலின. பெயரில் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் இன்று அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். இதன்போது ஆலயம் மற்றும. சூழலில் இருந்த மத அடையாளங்கள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் அகற்றப்பட்டுள்ளது. .எவரையும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுத்த தொல்லியல்த் திணைக்களம் இவ்வளவு ஆலய சொரூபங்களையும. அபகரித்துச் செல்வதறகும் உடந்தையாக செயலபட்டு விட்டதா எனக் கேளவி எழுப்புகின்றனர். இவ்வாறு அரச திணைக்களத்மின. பெயரில் தடுத்து நிறுத்தி மத வழிபாட்டித் தலத்தையே இல்லாது ஒழித்தபை அரசின. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகவே பார்ப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவில் குறுந்தூர்மலை, கீரிமலை ஆதிசிவன் மற்றுமோர் ஆலயமான வவுனியா வடக்கு நெடுங்கேணியில உள்ள வெடுக்குநாரிமலையில் உள்ள சிவன் ஆலயம் திட்டமிட்ட வகையில் அத்தனை விக்கிரகங்களும் அடியோடு பேர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை தற்போது உறுதி செய்யப்படுகின்றது. இலங்கையின் உள் நாட்டுப போர் முடிந்து 14 ஆண்டுகளானாலும் இன்னமும் மதம் மற்றும் கலாச்சார அழிப்புக்கள் நிறைவுறவில்லை என்பதனை தெளிவாக எடுத்துக காட்டுகின்றன. இதேநேரம் இலங்கையில் உள்ள தொல்லியல்த் திணைக்களம் என்பது தொன்மைகளையும் வரலாற்றையும் பாதுகாக்கவில்லை மாறாக சிங்களத்தையும் பெளத்தத்தையும் மட்டுமே வளர்ப்பதாக தமிழர்கள் தொடர்ந்தும் குற்றம சாட்டி வருவது மீண்டும் ஒரு முறை அது சரி என்பதனை நிரூபனம் செய்யும்முகமான சம்பவம் பதியப்பட்டுள்ளது. இவ்வாறு வெடுக்குநாரி ஆலய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டு சில அயலில் உள்ள காடுகளில் வீசப்பட்டுள்ளமை கண்டுகொள்ளப்பட்டுள்ளதாக ஆலயப்பகுதிக்கு சென்று திரும்பியவர்கள் எம்மிடம் உறுதி செய்கின்றனர். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image