Home » நெதர்லாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி!

நெதர்லாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை அணி!

Source

டி20 உலகக்கிண்ணத் தொடரின் குழு ஏ- 9ஆவது லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி, நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

வெற்றியின் மூலம் உலகக்கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்களையும் சரித் அசலங்க 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், நெதர்லாந்து அணி சார்பில் மீகெரென் மற்றும் லீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளாசென் மற்றும் குக்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நெதர்லாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இலங்கை கிரிக்கெட் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும் லஹிரு குமார மற்றும் பினுர பெணார்டோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image