Home » நெற்செய்கையாளர்களுக்கு 50 கிலோவைக்கொண்ட யூரியா உரமூடையை பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை

நெற்செய்கையாளர்களுக்கு 50 கிலோவைக்கொண்ட யூரியா உரமூடையை பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை

Source
Share Button

வேளாண்மை செய்கையாளர்களுக்கு 50 கிலோவைக் கொண்ட யூரியா உர மூடையை பத்தாயிரம் ரூபாவுக்கு விநியோகிக்க அராசங்கம் தீர்மானித்திருக்கிறது. உலக வங்கியின் 13 ஆயிரம்; தொன் யூரியா உரத்தினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ,; அதன் முதலாவது தொகுதி விவசாய அமைச்சுக்கு நேற்றுக் கிடைக்கப் பெற்றது. பெரும்போக நெற்செய்கைக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் தேவையாகும். இதனை முழுமையாக வழங்குவதற்கு முடியும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமாரவும் உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான சுரேன் பட்டகொடவும் தெரிவித்துள்ளனர். சோளச் செய்கைக்கும் யூரியா உரம் வழங்கப்படவுள்ளது. மேலும் 25 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தினை பெறுவது குறித்த உடன்படிக்கையினை அரசாங்கம் செய்து கொள்ளவுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image