Home » நெற் செய்கையாளர்கள், இதுவரை செலுத்தாத விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

நெற் செய்கையாளர்கள், இதுவரை செலுத்தாத விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

Source
Share Button

நெற்செய்கையாளர்கள் பெற்றுக் கொண்டு இதுவரை செலுத்தாதுள்ள விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளது.

நெற்செய்கைக்காக விவசாயிகளால் பெறப்பட்டுள்ள கடன்தொகையை மீளச் செலுத்துவதற்கு இயலாமல் போயுள்ளதுடன், குறித்த கடன்களை அறவிடமுடியாக் கடனாக வங்கிகள் வகைப்படுத்தியுள்ளன.

எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான கடன்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகமான விவசாயிகள் தகைமையற்றவர்களாவதற்கு வாய்ப்புள்ளமையால், அரச தலையீட்டில் அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது அத்தியாவசியமாகவுள்ளது.

அதற்கமைய, இரண்டு ஹெக்ரயார் அல்லது அதற்குக் குறைவான காணியில் நெற்செய்கைக்காக அரச வங்கியிலிருந்து கடன் பெறப்பட்டு தற்போது மீளச் செலுத்துவதற்கு இயலாமல் போயுள்ள ஆரம்பக் கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image