நெல் கொள்வனவிற்காக அரசாங்கம் மேலும் 300 கோடி ரூபாவை வழங்கியுள்ளது. 2022ஃ2023 பெரும்போகத்தில் அரிசி கொள்வனவு திட்டத்திற்காக அரசாங்கம் இதற்கு முன்னர், பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தது. தேவை ஏற்படுமானால், மேலும் பணத்தை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இம்முறை நெல் கொள்வனவு, மாவட்ட செயலாளர்களின் ஊடாகவும், மாவட்ட செயலாளர்களின் ஊடாகவும் முன்னெடுக்கப்படுகிறது. கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக மாற்றி குறைந்த வருமானம் பெறும் 29 லட்சம் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் பத்து கிலோ அரிசி இவ்வாறு வழங்கப்படுகிறது.