நெல் கொள்வனவு சபையிடம் இருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு

நெல் கொள்வனவு சபையிடம் உள்ள நெல்லை பயன்படுத்தி மாதாந்தம் பத்தாயிரம் மெற்றிக் தொன் அரிசியை சந்தைக்கு விநியோகிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். சபையிடம் காணப்படும் சம்பா நெல்லை பயன்படுத்தி, பி.எம்.பீ.ரைஸ் என்ற பெயரில் ஐந்து கிலோ மற்றும் பத்து கிலோ பொதிகளில் சந்தைக்கு விநியோகிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் விலை அதிகரிப்பதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
