Home » நேரடி வரியை அதிகரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியின் வருவாயை அதிகரிக்கவும் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்!

நேரடி வரியை அதிகரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியின் வருவாயை அதிகரிக்கவும் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்!

Source

வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பின் பின்னர் விவேகமான பொருளாதார முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பான விசேட உரையொன்றை இன்று (19) ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தயக்கமின்றி, தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்து பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் கடனாளிகளின் பங்குபற்றுதலுடன் வாஷிங்டனில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இம்மாத தொடக்கத்தில் IMF மற்றும் உலக வங்கி குழுமத்தின் 2022 ஆண்டு கூட்டங்களை ஒட்டி இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு கடன் வழங்கிய ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று முக்கிய நாடுகளுடன் பொதுவான ஒரு தளத்துக்கு வர வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதியின் கூற்றுப்படி, இந்தியாவும் சீனாவும் இந்த விடயத்தை மேலும் ஆராய்ந்த பின்னர் பதில்களை வழங்குவதாகவும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தேவைப்படலாம் என்றும் தெரிவித்துள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் 2019 நவம்பரில் வரி குறைப்புக்கள் நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன என்று சுட்டிக்காட்டினார்.

2026ஆம் ஆண்டளவில் நாட்டின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5% இலிருந்து 14.5% ஆக அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக கூறுகிறார்.

நாட்டின் வருவாயை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என குறிப்பிட்ட அவர், தேசத்தை கட்டியெழுப்ப தயக்கம் காட்டினாலும் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நோக்கத்திற்காக, 2026 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வருவாயை 14.5% – 15% வரை அடையும் நோக்கத்துடன் புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய வரி முறை இல்லாமல் இந்த இலக்கை அடைய முடியாது. நேரடி வரிகள் ஏன் அதிகரிக்கப்பட்டது என விளக்கமளித்த ஜனாதிபதி, நாட்டின் மறைமுக வரி வருமானம் 80% ஆகவும், நேரடி வரி வருமானம் 20% மட்டுமே கடந்த காலத்தில் அரவிடப்பட்டன. இருப்பினும், மறைமுக வரிகளை உயர்த்தினால், சாதாரண குடிமக்கள் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், நேரடி வரிகள் 20% ஐ தாண்ட வேண்டும் என்று IMF பிரதிநிதிகள் கருதினர்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் சான்றிதழைப் பெறத் தவறினால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஆதரவளிக்கும் நாடுகளின் சர்வதேச நிறுவனங்களின் ஆதரவைப் பெற முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அப்படி நடக்காவிட்டால், மீண்டும் நாங்கள் வரிசைகளின் சகாப்தத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image