Home » நேரடி வரியை 40 சதவீதமாக உயர்த்த தீர்மானம்!

நேரடி வரியை 40 சதவீதமாக உயர்த்த தீர்மானம்!

Source

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை (IMF) தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வரி திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த பிற சீர்திருத்தங்கள் இதனை உறுதிப்படுத்தல் செயல்முறையின் பகுதிகள் என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்கவுடனான நேர்காணலின் போதே CBSL ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

80% மறைமுக வரி மற்றும் 20% நேரடி வரி முறையே 60% மற்றும் 40% ஆக மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு, குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, CBSL ஆளுநர் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு வரி முறையை தொடர முன்மொழிந்தார்.

மேலும் பேசிய அவர், இலங்கையின் வரி வருமானம் ஈரான் மற்றும் வெனிசுலா இரண்டிற்கும் பின்னால் உள்ளது என்றார்.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image