நைஜீரியாவில் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிப்பு

கடந்த ஒரு தசாப்த காலத்தில் நைஜீரியாவை தாக்கிய மிக மோசமான வெள்ளத்தால் 28 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 13 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனி குட்டரஸ் தெரிவித்துள்ளார். பேரழிவு ஏற்பட்டுள்ள இந்;த சவாலான காலத்தில், நைஜீரிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பொதுச் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
