Home » நோர்வே பெற்றுக்கொண்ட முஸ்லிம்களின் யுத்தப் பாதிப்பு ஆவணங்களை இலங்கையிடம் ஒப்படைக்கவில்லை – ஏ. உவைஸ்

நோர்வே பெற்றுக்கொண்ட முஸ்லிம்களின் யுத்தப் பாதிப்பு ஆவணங்களை இலங்கையிடம் ஒப்படைக்கவில்லை – ஏ. உவைஸ்

Source
மத்தியஸ்தம் என்ற பெயரில் சமாதான முன்னெடுப்புக்களின் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்தைச் சந்தித்த நோர்வே நாட்டுஅதிகாரிகள் முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக் கொண்ட இழப்புக்கள் பாதிப்புக்கள் பற்றிய ஆவணங்களை இன்னும் ஏன் இலங்கைஅரசிடம் கையளிக்கவில்லை என்ற கேள்வி எழுவதாக றைஸ் ஸ்ரீலங்காவின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் செயலாளரும்சட்டத்தரணியுமான ஏ. உவைஸ் தெரிவித்தார். ஈழப் பிரிவினைப் போர் காத்தான்குடி சமூகத்தின்மீது ஏற்படுத்திய பாதிப்புக்களும் கோரிக்கைளும் எனும் தொனிப் பொருளில்எழுதப்பட்ட இலவச நூல் வெளியீட்டு வைபவத்தில் அவர் தலைமையேற்று உரையாற்றினார். காத்தான்குடி றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் மற்றும்  காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியவற்றின்கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு காத்தான்குடி அல் மனார் அறிவியல் கல்லூரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை  இரவு இடம்பெற்றது. சமூக செயற்பாட்டாளரும் ஆங்கில மொழி ஆசிரியருமான எம்.ஏ.சி.எம். ஜவாஹிர் எழுதிய இந்நூல் வெளியீட்டு வைபவத்தில்கர்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தவைலர் ஏ.எம்.எம். றவூப் அப்துல் மஜீத்,  றைஸ் ஸ்ரீலங்காநிறுவனத்தின் பணிப்பாளர்  நவாஸ் முஹம்மத் காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின்நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் நூல் விமர்சகரும் எழுத்தாளரும் சமூக சேவையாளருமான ஸிறாஜ் மஷ{ர் உட்படஇன்னும் பல பிரமுகர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி உவைஸ், நோர்வேயின் கையில் உள்ள அந்த ஆவணங்கள் மீளக் கையளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை பாதிக்கப்பட்டமுஸ்லிம்களாகிய நாம்  தற்போது முன் வைக்கின்றோம். சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்திருந்த ஐரோப்பிய நாடொன்றின் தூதரிடம் இது பற்றி முன் வைத்தோம். எங்களது கோரிக்கைநியாயமானது என்று அவரும் ஒப்புக்கொண்ட அதேநேரம் இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு இதுபற்றிய வேண்டுகோளைமுன்வையுங்கள் என்று அறிவுறுத்தி விட்டுச் சென்றார். அந்த நடிவடிக்கை தொடரும். இது ஒரு தொடக்கப் புள்ளிதான். இன்றைய கால கட்டத்தில் காத்தான்குடி சமூகம் அவர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குப் பரிகாரம் வேண்டிநிற்கின்றது. இந்தத் தாக்கத்தை எவ்வாறு ஈடுசெய்யலாம் என்பதுதான் அதன் நோக்கம். காத்தான்குடியில் ஏற்படும் பல்வேறு வகையாக பிரச்சினைகளின் மூலாதாரமாக இட நெருக்கடியும் காணிப்பிரச்சினையும்தான்முன்னிற்கின்றது என்பதை நாமறிவோம். காணிச் சமபங்கு மறுக்கப்பட்டுள்ள இந்தச் சமூகத்திற்கு காணிகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றபொழுதுநெருக்குவாரப்படும் காத்தான்குடி சமூகத்தின் பாதிக்கு மேற்பட்ட பிரச்சினைகள் தீரும். இங்கே ஏற்பட்டிருக்கின்ற சமூக பொருளாதார கல்வி சுகாதாரப் பிரச்சினை, விரக்தி, வேலையின்மை போதை வஸ்துப் பிரச்சினைஎன்பவை அடிப்படையில் காத்தான்குடி மக்களின் காணிப்பிரச்சினையை அதனை அடியொற்றியதாக ஏற்பட்டதேயன்றி வேறில்லை. எனவே இவை தேசிய சர்வதேச மட்டங்களின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். இந்தப் பிரசை;சினைகளுக்குத் தீர்வு  உள்ளது எங்களுடைய சகோதர சமூகம் எவ்வாறு அணுகி ஒத்துழைப்பு வழங்குன்றது என்பதுநின்று நிதானித்துப் பார்க்கப்பட வேண்டும். சமதானம் ஏற்படுத்தப்படுகின்ற பொழுது அனைத்து சமூகத்தவரும் பேசுவதற்கான களம் அமைக்கப்பட வேண்டும் அரசியல்வாதிகள்மாத்திரமல்ல சிவில் சமூகத்திற்கான திறந்த களம் அமைக்கப்பட வேண்டும். உயிர்த ஞாயிறுத் தாக்குதல் முஸ்லிம் சமூகத்தை  உயிரற்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டிருந்தது. காத்தான்குடி  சமூகத்திற்குஏற்பட்ட இழுக்கு களையப்பட வேண்டும் சமாதான யைம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.” என்றார். AR
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image