பங்களாதேஷிடம் பெற்ற 200 மில்லியன் டொலரில் 150 மில்லியன் டொலரை திருப்பிச் செலுத்திய இலங்கை
பங்களாதேஷில் இருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் டொலர் பரிமாற்ற கடனில் இரண்டாவது தவணையாக 100 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த swap கடன் வசதியில் முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை செலுத்த கடந்த மாதம் இலங்கை ஏற்பாடு செய்திருந்தது.
மீதமுள்ள 50 மில்லியன் டொலர்கள் இந்த ஆண்டு செலுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் வங்கியின் செயல் இயக்குநர் மெஸ்பால் ஹக் தெரிவித்தார்.