சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி, இரு நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ளுளுஊ மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து போட்டிகளும் ளுளுஊ மைதானத்தில் நடைபெறவுள்ளன. ஒருநாள் போட்டித் தொடரின் பின்னர், மூன்று ரி-20 போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.