பங்கேற்பு ஜனநாயகம் பற்றி பாராளுமன்றங்களுக்கு இடையிலான அமைப்பின் பொதுச் செயலாளர் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்

பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள், யோசனைகள் பற்றி பாராளுமன்றங்களுக்கு இடையிலான சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு, பிரதமர் தினேஷ் குனவர்த்தன விளக்கமளித்துள்ளார். சங்கத்தின் பொதுச் செயலாளர் மாட்டின் சுங்கொங் ஐ இன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குனவர்த்தன சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக முறையில் நிலவும் நெருக்கடிகள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மக்களின் பங்கேட்புடன் கூடிய வலுவான பாராளுமன்ற மேற்பார்வை குழுவை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் தினேஷ் குனவர்த்தன விளக்கமளித்தார். கொள்கை ரீதியான வழிகாட்டல் தேசிய ரீதியான அபிலாஷைகள் என்பன பற்றி முன்னுரிமை வழங்குவதற்காக பாராளுமன்றத்தின் சகல அரசியல் கட்சிகளினதும் பங்கேற்புடன் தேசிய சபை ஒன்றை அமைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இணக்கப்பாட்டை மாட்டின் சுங்கொங் வரவேற்றுப் பேசினார்.
