வலுசக்தி துறையில் பசுமை வலுசக்திக்கான முதலீட்டினை மேம்படுத்துவதற்கு இலங்கை தயார் என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.இலங்கை பசுமை வலுசக்தி மாநாட்டின் 2023 ஆம் ஆண்டிற்கான தலைவர் என்ற வகையில் மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்தியபோதே ருவன் விஜேயவர்தன இதனை குறிப்பிட்டார்.