Home » படகு கவிழ்ந்து கடலில் தவித்த இருவரையும் தமிழக மீனவர்கள் மீட்டனர்.

படகு கவிழ்ந்து கடலில் தவித்த இருவரையும் தமிழக மீனவர்கள் மீட்டனர்.

Source

யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் சரகம் , சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் இருந்து தொலைபேசி  மூலம் இலங்கை நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு நபர்கள் வந்ததாக தகவல் கூறியதின் பேரில்  விசாரணை செய்ததில் அமலதாஸ் ஆண்டனி பலாலி, யாழ்பாணம், என்பவருக்கு சொந்தமான படகில் 31.07.2022 ஆம் தேதி மதியம்  பலாலி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புறப்பட்ட  வி.ஜெனார்தனன், வயது 28 , பலாலி, யாழ்பாணம், மற்றும் கா. ஜெசிகரன் பலாலி, யாழ்பாணம், ஆகிய இருவரும் தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

1ஆம் திகதி  03.00 மணியளவில் இந்திய சர்வதேச எல்லை அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த போது படகு கவிழ்ந்ததில் இருவரும் பிளாஸ்டிக் வெற்றுக் கானை பிடித்து உயிர் தப்பியுள்ளனர். இதன்போது  இன்று O2.08.2022 ஆம் தேதி காலை 07.00 மணிக்கு சிறுதலைக் காடுகடற்கரைக்கு வந்தவர்களை தமிழ்நாடு  IND TN06 MO    8106 என்ற இலக்க  படகில் சென்றவர்கள்  இரண்டு மீனவர்களையும் படகில் ஏற்றி   இன்று மதியம் 14.00 மணிக்கு  கொண்டு சென்றுள்ளனர். , இவர்கள் இருவரையும் வேதாரண்யம் கடற்கரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ய உள்ளனர்.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image