இலங்கையில் பலரிடம் வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து பணத்தை பெற்று இந்தியாவிற்கு படகில் ஓடியவரிற்கு எதிராக இலங்கையில் இருந்து சென்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மூதூரைச் சேர்ந்த 20 பேரிடம் இருந்து வெளிநாடு அனுப்புவதாக கூறி தலா 60 ஆயிரம் ரூபா வீதம் ஒருவர் பெற்றுள்ளார். அவ்வாறு பெற்றவர் அண்மையில் அகதியாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்றுள்ளார்.
இதனால் தப்பிச் சென்றவரிடம் பணத்தை செலுத்திய ஒருவர் கடவுச் சீட்டின் மூலம் விமானத்தில் பயணிந்து இராதேஸ்வரம் மண்டபம் பகுதிக்குச் சென்று பணத்தை பெற்று தப்பியோடி இந்தியா வந்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு எழுத்தில் கடிதம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு வழங்கிய கடிதம் தொடர்பில் ஆராய்ந்து உரிய பதில் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TL