Home » பணியாளர் பற்றாக்குறை நிலவிய போதிலும், மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை. 

பணியாளர் பற்றாக்குறை நிலவிய போதிலும், மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை. 

Source
Share Button

பணியாளர்கள் பற்றாக்குறை நிலவிய போதிலும், மக்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம், சொகுசு ரயில் சேவைகள் இரண்டு, வார இறுதி நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. அவ்வாறே, அலுவலக ரயில் சேவையில் மேலதிக பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ரயில்வே திணைக்களத்தில் மாத்திரம் சுமார் ஏழாயிரம் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. மொத்தமாக 21 ஆயிரம் பணியாளர் பற்றாகுறை நிலவுகிறது. இருப்பினும், தற்போது 14 ஆயிரம் பணியாளர்கள் மாத்திரமே உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் சுமார் 250 ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். அதன்படி, எதிர்காலத்தில் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், ரயில்வே நிலைய முகாமையாளர்கள், இரத்மலானை இயந்திர உப திணைக்களம் மற்றும் வீதி மற்றும் கைத்தொழில் திணைக்களங்களில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image