பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன

பண்டிகைக் காலத்தின் போது, அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பருப்பு, கோதுமை, சீனி, ரின்மீன் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், மக்களின் வருமானத்தை விட உணவுக்காக செலவிடப்படும் தொகை விகிதாச்சாரப்படி அதிகரிதுள்ளமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால், எதிர்காலத்தில் உள்ளுர் உற்பத்திகளை அதிகரித்து, பொருட்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலங்களில் நுகர்வோரிடமிருந்து கிடைக்கும் முறைபாடுகள் அதிகரித்துள்ளது. இந்த முறைபாடுகள் தொடர்பில் செயற்படுவதற்காக வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் விழிப்புணர்வு பிரிவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி உதயகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். 1977 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். பேஸ்புக் ஊடாகவும் முறைபாடுகளை வழங்கவதற்கான சந்தர்ப்பம அளிக்கப்பட்டுள்ளது.
