பண்டிகைக் காலங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதியோரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, சுயதொழில் செய்யும் சிறு மற்றும்; தொழில் முனைவோர், பண்டிகைக் காலங்களில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் வீதியோரங்களில் இருந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்ய தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.