பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் கோட்டாவை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் கஞ்ஞன விஜேயசேகர தலைமையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டமையினால் எரிபொருள் இறக்குமதிக்கான கோட்டாவில் எந்தவி மாற்றமும் ஏற்படாது என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்ட பின்னர் ஞசு முறையை பயன்படுத்தி இடம்பெற்ற முறைகேடுகள் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.